1 Chronicles 11:3 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே யெகோவாவுக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டபின்பு, யெகோவா சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் தாவீது அரசனிடம் எப்ரோனுக்கு வந்தபோது, தாவீது யெகோவா முன்னிலையில் எப்ரோனில் அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்தான். சாமுயேலுக்கு யெகோவா கொடுத்திருந்த வாக்குப்படியே அவர்கள் தாவீதை இஸ்ரயேலுக்கு அரசனாக அபிஷேகம் பண்ணினார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்படியே இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் எப்ரோனிலே ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டபின்பு, கர்த்தர் சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தார்கள்.
Tamil Bible Romanised 2017
appadiyea isravealin moopparellaarum ebroanilea raajaavinidaththil vanthaarga'l; thaaveethu ebroanilea karththarukku munbaaga avarga'loadu udanpadikkai pa'n'nikko'ndapinbu, karththar saamuvealaikko'ndu sonna vaarththaiyinpadiyea avarga'l thaaveethai isravealinmeal raajaavaaga abisheagampa'n'ninaarga'l.
Tamil OV
அப்படியே இஸ்ரவேலின் மூப்பரெல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின்பு, கர்த்தர் சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இஸ்ரவேலரின் தலைவர்கள் அனைவரும் எப்ரோன் நகரில் தாவீதிடம் வந்தனர். தாவீது அவர்களிடம் கர்த்தருக்கு முன்பாக எப்ரோனில் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். தலைவர்கள் தாவீதுக்கு அபிஷேகம் செய்தனர். அதனால் அவன் இஸ்ரவேலருக்கு ராஜா ஆனான். கர்த்தர் சொன்னபடியே நடந்தது. கர்த்தர் அந்த வாக்குறுதியைக் கூற சாமுவேலைப் பயன்படுத்தினார்.