1 Chronicles 11:6 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எபூசியர்களை முறியடிப்பதில் எவன் முந்தினவனாக இருக்கிறானோ, அவன் தலைவனும் தளபதியுமாக இருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் மகனாகிய யோவாப் முந்தி அவர்களை முறியடித்து தலைவனாக்கப்பட்டான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எபூசியரை முதலில் தாக்குகிறவன் எவனோ அவனே பிரதம படைத்தளபதியாய் இருப்பான் என தாவீது சொல்லியிருந்தான். செருயாவின் மகன் யோவாப் முதலில் போனதால் அவனே படைத்தளபதி ஆனான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எபூசியர்களை முறியடிப்பதில் எவன் முந்தினவனாக இருக்கிறானோ, அவன் தலைவனும் தளபதியுமாக இருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் மகனாகிய யோவாப் முந்தி அவர்களை முறியடித்து தலைவனாக்கப்பட்டான்.
Tamil Bible Romanised 2017
eboosiyarai mu'riya adikki'rathil evan munthinavanaayirukki'raanoa, avan thalaivanum seanaabathiyumaayiruppaanen'ru thaaveethu solliyirunthaan; seruyaavin kumaaranaagiya yoavaab munthi ea'rith thalaivanaanaan.
Tamil OV
எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தாவீது, “எவனொருவன் எபூசியரோடு போரிட வழிநடத்திச் சென்றானோ அவன் என் படை முழுவதற்கும் தளபதியாவான்” என்றான். எனவே, யோவாப் போருக்கு வழிநடத்தினான். யோவாப், செருயாவின் குமாரன். யோவாப் படைத் தளபதியானான்.