1 Chronicles 15:29 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவுடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரம்வரை வந்தபோது, சவுலின் மகளாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன்னுடைய இருதயத்தில் அவமதித்தாள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி தாவீதின் நகரத்தினுள் வரும்போது, சவுலின் மகள் மீகாள் ஜன்னலின் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். தாவீது அரசன் நடனமாடி மகிழ்ச்சிக் களிப்புடன் வருவதைக் கண்டபோது அவனைத் தனது இருதயத்தில் இகழ்ந்தாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரம்வரை வந்தபோது, சவுலின் மகளாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன்னுடைய இருதயத்தில் அவமதித்தாள்.
Tamil Bible Romanised 2017
karththarudaiya udanpadikkaippetti thaaveethin nagaramattum vanthapoathu, savulin kumaaraththiyaagiya meekaa'l palaga'nivazhiyaayp paarththu, thaaveethu raajaa aadippaadi varugi'rathaik ka'ndu, avanaith than iruthayaththilea avamathiththaa'l.
Tamil OV
கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரமட்டும் வந்தபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உடன்படிக்கைப் பெட்டியானது தாவீதின் நகரத்திற்குள் வந்தபோது, தன் ஜன்னலின் வழியாக மீகாள் பார்த்தாள். மீகாள் சவுலின் குமாரத்தி. ராஜாவாகிய தாவீது ஆடிப்பாடி வருவதையும் கண்டாள். அவளுக்குத் தாவீது மீது இருந்த மரியாதை போயிற்று. அவனை அவள், ஒரு முட்டாளாக எண்ணினாள்.