1 Chronicles 20:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அடுத்த வருடம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவ பலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோனியர்களின் தேசத்தை அழித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றுகையிட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைத் தோற்கடித்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அரசர்கள் போருக்குச் செல்லும் வசந்தகாலத்தில் யோவாப் தனது ஆயுதம் தாங்கிய படைக்குத் தலைமை தாங்கிச் சென்றான். அவன் அம்மோனியரின் நாட்டை பாழாக்கி ரப்பாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான். ஆனால் தாவீது எருசலேமில் இருந்து விட்டான். யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைப் பாழிடமாக்கினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அடுத்த வருடம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவ பலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோனியர்களின் தேசத்தை அழித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றுகையிட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவைத் தாக்கி அதைத் தோற்கடித்தான்.
Tamil Bible Romanised 2017
ma'ruvarusham, raajaakka'l yuththaththi'rkup pu'rappadum kaalam vanthapoathu, yoavaab iraa'nuvabalaththaik koottikko'ndupoay, ammoan puththirarin theasaththaip paazhkkadiththu rabbaavukku vanthu athai mut'rikkaipoattaan; thaaveethoa erusaleamil irunthuvittaan; yoavaab rabbaavai adiththuch sanggariththaan.
Tamil OV
மறுவருஷம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவபலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோன் புத்திரரின் தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றிக்கைபோட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவை அடித்துச் சங்கரித்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அடுத்த ஆண்டு வசந்தகால வேளையில், இஸ்ரவேல் படையைக் கூட்டி யோவாப் போருக்குத் தயார் செய்தான். பொதுவாக ராஜாக்கள் போருக்கு வெளியே புறப்பட்டுச் செல்லும் காலம் அது. ஆனால் தாவீது எருசலேமில் இருந்தான். இஸ்ரவேல் படை அம்மோன் நாட்டிற்குப் போய் அதை அழித்தது. பிறகு அவர்கள் ரப்பா நாட்டிற்குச் சென்று அங்கே முற்றுகையிட்டது. ஆட்களை உள்ளேயோ, வெளியேயோ போகவிடாமல் செய்தனர். யோவாப்பும் இஸ்ரவேல் படையும் அந்நகரம் அழியும்வரை போரிட்டனர்.