1 Chronicles 26:31 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எப்ரோனியர்களில் எரியாவும் இருந்தான்; அவனுடைய குடும்பத்தார்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைவனாக இருந்தவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருடத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து யாசேரிலே மிகுந்த பலமுள்ள வீரர்கள் காணப்பட்டார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எப்ரோனியருக்கு அவர்களுடைய குடும்ப வம்சவரலாற்று பதிவேட்டின்படி யெரியா தலைவனாயிருந்தான். தாவீதின் அரசாட்சியின் நாற்பதாவது வருடத்தில் பதிவேடுகள் ஆராயப்பட்டன. அப்போது எப்ரோனியர் மத்தியில் கீலேயாத்திலுள்ள யாசேர் என்னும் இடத்தில் ஆற்றல்மிக்க மனிதர்கள் இருப்பதைக் கண்டனர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எப்ரோனியர்களில் எரியாவும் இருந்தான்; அவனுடைய குடும்பத்தார்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைவனாக இருந்தவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருடத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே மிகுந்த பலமுள்ள வீரர்கள் காணப்பட்டார்கள்.
Tamil Bible Romanised 2017
ebroaniyaril eriyaavum irunthaan; avan than pithaakka'lin vamsangga'laana ebroaniyaril thalaimaiyaanavan; thaaveethu arasaa'nda naa'rpathaam varushaththilea avarga'l theadappattapoathu avarga'lukku'l'lea keeleayaaththeasaththu easearilea baraakkirama veerar kaa'nappattaarga'l.
Tamil OV
எப்ரோனியரில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எப்ரோனின் வம்சவரலாறு: இவர்களின் தலைவனாக எரியா இருந்ததாகக் கூறும், தாவீதின் 40வது ஆட்சியாண்டில் குடும்ப வரலாற்றின் மூலம் திறமையும் சக்தியும் கொண்டவர்களைத் தேடும்படி கட்டளையிட்டான். அவர்களில் சிலர் எப்ரோன் வம்சத்தவர்களாக கீலேயாத் நாட்டின் ஏசேரில் கண்டுபிடித்தனர்.