1 Chronicles 7:40 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆசேரின் சந்ததிகளாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தலைவர்களும் தெரிந்துகொள்ளப்பட்ட பெலசாலிகளும், பிரபுக்களின் தலைவர்களுமாக இருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆசேரின் வழித்தோன்றலாகிய இவர்கள் எல்லோரும் குடும்பங்களின் தலைவர்களும், சிறந்த மனிதர்களும், தைரியமிக்க இராணுவ வீரர்களும், புகழ்பெற்ற தலைவர்களுமாயிருந்தனர். போருக்கு ஆயத்தமாக இருந்தவர்கள் அவர்களுடைய வம்சங்களின்படி கணக்கிடப்பட்டபோது 26,000 பேராயிருந்தனர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆசேரின் சந்ததிகளாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தலைவர்களும் தெரிந்துகொள்ளப்பட்ட பெலசாலிகளும், பிரபுக்களின் தலைவர்களுமாக இருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர்.
Tamil Bible Romanised 2017
aasearin puththiraraagiya ivarga'l ellaarum thangga'l pithaakka'lin vamsaththalaivarum therinthuko'l'lappatta baraakkiramasaaliga'lum, pirabukka'lin thalaivarumaayirunthaarga'l; avarga'l vamsa attava'naiga'lil yuththaththi'rkup poagaththakka seavagarin ilakkam irubaththaa'raayirampear.
Tamil OV
ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவர்கள் அனைவரும் ஆசேரின் சந்ததியினர். இவர்கள் குடும்பத் தலைவர்கள், இவர்கள் மகத்தான மனிதர்கள், இவர்கள் வலிமைமிக்க வீரர்கள், திறமைமிக்க வீரர்களான இவர்களில் 26,000 பேர் போர் செய்வதற்குத் தயாரான வீரர்களாக இருந்தார்கள்.