1 Corinthians 1:21 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உலகம் தம் ஞானத்தால் இறைவனை அறியமுடியாதபடி, இறைவன் தமது ஞானத்தில் இதைச் செய்திருக்கிறார். எனவே மூடத்தனமாய்த் தோன்றுகிற எங்கள் பிரசங்கத்தினால் விசுவாசிக்கிறவர்களை இரட்சிக்க இறைவன் விருப்பங்கொண்டார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இறைவனின் ஞானமான திட்டத்தின்படி ஞானத்தால் உலகம் இறைவனை அறிய முடியாததாயிருக்கையில், முட்டாள்தனமாகத் தோன்றுகின்ற எமது பிரசங்கத்தைக்கொண்டு, அதனூடாக விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை மீட்க இறைவன் விருப்பம் கொண்டார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எப்படியென்றால், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாமல் இருந்ததினால், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமானது.
Tamil Bible Romanised 2017
eppadiyenil, theavagnaanaththukkeat'rapadi ulagamaanathu suyagnaanaththinaalea theavanai a'riyaathirukkaiyil, paiththiyamaagath thoan'rugi'ra pirasanggaththinaalea visuvaasiga'lai iradchikkath theavanukkup piriyamaayit'ru.
Tamil OV
எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் தனது ஞானத்தினால் விரும்பியது இதுவே: உலகத்தின் ஞானத்தால், உலகம் தேவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனை விசுவாசிக்கிற மக்களைக் காக்கும்பொருட்டு மடமையாய்த் தோன்றும் தனது செய்தியை தேவன் பயன்படுத்தினார்.