1 Corinthians 11:6 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பெண்ணானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமுடியையும் கத்தரித்துப்போடவேண்டும்; தலைமுடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவ்விதம் ஒரு பெண் தன் தலையை மூடிக்கொள்ளாவிட்டால், அவள் தன் தலைமுடியை வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு பெண் தன் தலைமுடியை வெட்டிக்கொள்வதோ, தன் தலையை மொட்டையடிப்பதோ, அவளுக்கு வெட்கமாக இருக்குமென்றால், அவள் தன் தலையை மூடிக்கொள்ளவேண்டும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவ்விதம் ஒரு பெண் தன் தலையை மூடிக்கொள்ளாவிட்டால் அவள் தன் தலைமுடியை கட்டையாக கத்தரித்துக்கொள்ள வேண்டும். அப்படியாக, தன் தலைமுடியை கட்டையாக கத்தரித்துக்கொள்வதோ, தலையை மொட்டையடிப்பதோ அவளுக்கு அவமானமாக இருந்தால் அவள் தன் தலையை மூடிக்கொள்ள வேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பெண்ணானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமுடியையும் கத்தரித்துப்போடவேண்டும்; தலைமுடி கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் பெண்களுக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.
Tamil Bible Romanised 2017
sthireeyaanava'l mukkaadittukko'l'laavittaal thalaimayiraiyum kaththariththuppoadakkadava'l; thalaimayir kaththarikkappadugi'rathum siraikkappadugi'rathum sthireekku vedkamaanaal mukkaadittukko'ndirukkakkadava'l.
Tamil OV
ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஒரு பெண் தனது தலையை மூடியிராவிட்டால் அவள் தலை மயிரை மழிப்பதற்கு ஒப்பாகும். தலை மயிரைக் குறைப்பதோ, மழிப்பதோ பெண்ணுக்கு இழிவைத் தரும். எனவே அவள் தனது தலையை மூடியிருக்க வேண்டும்.