1 Corinthians 12:10 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மற்றொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமைகளும், வேறொருவருக்கு இறைவாக்கு உரைக்கவும், இன்னொருவருக்கு ஆவிகளைப் பகுத்தறியும் ஆற்றலும் கொடுக்கப்படுகின்றன. ஒருவருக்கும் ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளும், மற்றொருவருக்கு அந்தப் பல்வகையான வேற்று மொழிகளை விளக்கிச்சொல்லும் ஆற்றலும் கொடுக்கப்படுகிறது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மற்றொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமையும், வேறொருவருக்கு இறைவாக்கு உரைத்தலும், இன்னொருவருக்கு ஆவிகளை பகுத்தறியும் ஆற்றலும், ஒருவருக்கு ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்றுமொழிகளும், மற்றொருவருக்கு அந்தப் பல்வகையான வேற்றுமொழிகளை விளக்கிச் சொல்லும் ஆற்றலும் கொடுக்கப்படுகின்றன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது.
Tamil Bible Romanised 2017
vea'roruvanukku a'rputhangga'laich seyyum sakthiyum, vea'roruvanukkuth theerkkatharisanam uraiththalum, vea'roruvanukku aaviga'laip paguththa'rithalum, vea'roruvanukkup pa'rpala baashaiga'laip peasuthalum, vea'roruvanukkup baashaiga'lai viyaakkiyaanampa'n'nuthalum a'likkappadugi'rathu.
Tamil OV
வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதிசயங்களைச் செய்யும் சக்தியை இன்னொரு மனிதனுக்கு ஆவியானவர் கொடுக்கிறார். இன்னொருவனுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லும் திறனையும், மற்றொருவனுக்கு நல்ல, தீய ஆவிகளின் வேறுபாட்டைக் காணும் திறனையும் அளிக்கிறார். பல்வேறு மொழிகளிலும் பேசும் ஆற்றலை ஒருவனுக்கும், அம்மொழிகளை விளக்கியுரைக்கும் திறமையை மற்றொருவனுக்கும் அளிக்கிறார்.