1 Corinthians 12:24 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நம்மில் இலட்சணமானவைகளுக்கு அலங்கரிப்பு தேவையில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்படியான விசேஷ பராமரிப்பு, உடலின் மறைந்திராத உறுப்புகளுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ, மதிப்புக்குறைந்த உறுப்புகளுக்கு, அதிக மதிப்பைக் கொடுக்கும் வகையில் உடலின் உறுப்புகளை அமைத்திருக்கிறார்,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
அவ்விதமான எண்ணம் உடலின் மறைந்திராத அங்கங்களுக்குத் தேவையில்லை. ஆனால் இறைவனோ மதிப்புக் குறைந்த அங்கங்களுக்கு அதிக மதிப்பைக் கொடுத்து உடலின் அங்கங்களை ஒன்றிணைத்துள்ளார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நம்மில் இலட்சணமானவைகளுக்கு அலங்கரிப்பு தேவையில்லை.
Tamil Bible Romanised 2017
nammil iladcha'namu'l'lavaiga'lukku alanggarippu vea'ndiyathillai.
Tamil OV
நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சரீரத்தின் அழகிய உறுப்புகளுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை. ஆனால் கௌரவிக்கத்தக்க உறுப்புகளை கௌரவிக்கிற விதத்தில் சரீரத்தின் உறுப்புக்களை தேவன் ஒழுங்குபடுத்தினார்.