1 Corinthians 14:21 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மறுமொழிக்காரர்களாலும், மறு உதடுகளாலும் இந்த மக்களிடத்தில் பேசுவேன்; ஆனாலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“வேற்று மொழிகளைப் பேசுகிறவர்களைக்கொண்டும், புரியாத உதடுகளைக்கொண்டும் இந்த மக்களுடன் நான் பேசுவேன். அப்பொழுதும் இவர்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள், என்று கர்த்தர் சொல்கிறார்” என மோசேயின் சட்டத்தில் எழுதியிருக்கிறதே.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
“வேற்றுமொழிகளைப் பேசுகின்றவர்களைக் கொண்டும், புரியாத உதடுகளைக் கொண்டும் இந்த மக்களுடன் நான் பேசுவேன். அப்போதும் இவர்கள் நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்று கர்த்தர் சொல்கின்றார்” என நீதிச்சட்டத்தில் எழுதியிருக்கின்றதே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மறுமொழிக்காரர்களாலும், மறு உதடுகளாலும் இந்த மக்களிடத்தில் பேசுவேன்; ஆனாலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.
Tamil Bible Romanised 2017
ma'rubaashaikkaararaalum, ma'ruuthaduga'laalum intha janangga'lidaththil peasuvean; aagilum avarga'l enakkuch sevikoduppathillaiyen'ru karththar sollugi'raar en'ru veathaththil ezhuthiyirukki'rathea.
Tamil OV
மறுபாஷைக்காரராலும், மறுவுதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“வெவ்வேறு மொழிகளைப் பேசும் மனிதர்களையும், வேற்று மக்களின் மொழிகளையும் பயன்படுத்தி இந்த மக்களோடு பேசுவேன். அப்போதும் இந்த மக்கள் எனக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள்” என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வாறு கர்த்தர் சொல்கிறார்.