1 Corinthians 5:7 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பழைய புளிப்பூட்டும் மாவை அகற்றிவிட்டு, புளிப்பில்லாத புதிதாய்ப் பிசைந்தமாவாக இருங்கள். உண்மையிலேயே நீங்கள் அப்படிப்பட்டவர்களே. ஏனெனில், நமது பஸ்கா ஆட்டுக்குட்டியாக கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நமது பஸ்கா ஆட்டுக்குட்டியாக கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கின்றபடியால், நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாக இருக்கின்றீர்கள். அப்படி இருக்கின்றபடியால் பழைய புளித்த மாவை அகற்றி விடுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகவே, நீங்கள் புளிப்பில்லாதவர்களாக இருக்கிறபடியே, புதிதாகப் பிசைந்த மாவாக இருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவை வெளியே தூக்கிப்போடுங்கள். ஏனென்றால், நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
Tamil Bible Romanised 2017
aagaiyaal, neengga'l pu'lippillaathavarga'laayirukki'rapadiyea, puthithaayp pisaintha maavaayirukkumpadikku, pazhaiya pu'liththamaavaip pu'rambea kazhiththuppoadungga'l. eanenil nammudaiya paskaavaagiya ki'risthu namakkaagap baliyidappattirukki'raarea.
Tamil OV
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்தமாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
புளித்த பழைய மாவை அகற்றுங்கள். இதனால் புதிய மாவாக நீங்கள் ஆகமுடியும். நீங்கள் புளிக்காத அப்பமாக ஏற்கெனவே இருக்கிறீர்கள். ஆம் நமது பஸ்கா ஆட்டுக் குட்டியாகிய கிறிஸ்துவோ ஏற்கெனவே நமக்காகக் கொல்லப்பட்டுள்ளார்.