1 Corinthians 6:16 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வேசியோடு இணைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாக இருக்கிறானென்று உங்களுக்குத் தெரியாதா? இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தன்னை ஒரு வேசியுடன் இணைக்கிறவன், அவளுடன் ஒரே உடலாய் இணைகிறான் என்பதை அறியாதிருக்கிறீர்களா? ஏனெனில், வேதவசனம் சொல்கிறபடி, “இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.”
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
தன்னை ஒரு விலைமாதுடன் இணைக்கின்றவன், அவளுடன் ஒரே உடலாய் இருக்கின்றான் என்பதை அறியாதிருக்கிறீர்களா? ஏனெனில், வேதவசனம் சொல்கின்றபடி, “இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வேசியோடு இணைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாக இருக்கிறானென்று உங்களுக்குத் தெரியாதா? இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
Tamil Bible Romanised 2017
veasiyoadu isainthirukki'ravan ava'ludanea orea sareeramaayirukki'raanen'ru a'riyeerga'laa? iruvarum orea maamsamaayiruppaarga'l en'ru solliyirukki'rathea.
Tamil OV
வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“இருவர் ஒன்றாவார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால் வேசியோடு உடலுறவு கொண்ட ஒருவன் அவளோடு ஒன்றாகிறான் என்பது உங்களுக்குத் தெரியும்.