1 John 5:14 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நாம் எதையாவது அவருடைய விருப்பத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் அறிந்திருக்கிற நம்பிக்கை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால், இறைவனுக்கு முன்வருவதற்கு நமக்குள்ள மனவுறுதி இதுவே: அவருடைய சித்தத்திற்கு இணங்க நாம் அவரிடம் எதையாவது கேட்கும்போது, அவர் நமது மன்றாட்டைக் கேட்கிறார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நாம் அவருடைய விருப்பத்திற்கு இணங்க அவரிடம் எதையாவது கேட்கும்போது, அவர் நமது மன்றாடுதலைக் கேட்கின்றார் என்பதே இறைவனுக்கு முன்பாக நமக்குள்ள மனவுறுதியாய் இருக்கின்றது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நாம் எதையாவது அவருடைய விருப்பத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் அறிந்திருக்கிற நம்பிக்கை.
Tamil Bible Romanised 2017
naam ethaiyaagilum avarudaiya siththaththinpadi keattaal, avar namakkuch sevikodukki'raarenbathea avaraip pat'ri naam ko'ndirukki'ra thairiyam.
Tamil OV
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எந்த ஐயமுமின்றி நாம் தேவனிடம் வரமுடியும். அவர் மனம் ஒத்துக்கொள்கிற எதனையும் நாம் தேவனிடம் வேண்டுகிறபோது, நாம் கேட்பதை தேவன் கவனிக்கிறார்.