1 Kings 10:2 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
திரளான கூட்டத்தோடும், நறுமணப்பொருட்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடம் வந்தபோது, தன்னுடைய மனதில் இருந்த எல்லாவற்றையும்குறித்து அவனிடம் உரையாடினாள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவள் தனது ஒட்டகங்களில் வாசனைப் பொருட்களையும், பெருந்தொகையான தங்கத்தையும், மாணிக்கக் கற்களையும் ஏற்றிக்கொண்டு, தனது பரிவாரங்களுடன் எருசலேமுக்கு வந்தாள். அவள் சாலொமோனிடம் வந்து, தனது மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் அவனுடன் பேசினாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
திரளான கூட்டத்தோடும், நறுமணப்பொருட்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலோமோனிடம் வந்தபோது, தன்னுடைய மனதில் இருந்த எல்லாவற்றையும்குறித்து அவனிடம் உரையாடினாள்.
Tamil Bible Romanised 2017
miguntha parivaaraththoadum, kanthavarkkangga'laiyum, miguthiyaana ponnaiyum iraththinangga'laiyum sumakki'ra ottagangga'loadum, erusaleamukku vanthaa'l; ava'l saalomoanidaththil vanthapoathu, than manathil iruntha ellaavat'raiyungku'riththu avanidaththil sambaashiththaa'l.
Tamil OV
மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலோமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங்குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஏராளமான வேலைக்காரர்களோடு அவள் எருசலேமுக்குப் பயணம் செய்தாள். ஏராளமான இரத்தினங்களை சுமக்கிற ஒட்டகங்களையும், மணப் பொருட்களையும், நகைகளையும் பொன்னையும் சுமந்து வந்தாள். அவள் சாலொமோனை சந்தித்து தனக்குத் தெரிந்த பல வினாக்களைக் கேட்டாள்.