1 Kings 16:34 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடைய நாட்களிலே பெத்தேல் ஊரைச்சேர்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான்; யெகோவா நூனின் மகனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன்னுடைய இளைய மகனையும் சாகக்கொடுத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகாபின் காலத்தில் பெத்தேலில் இருந்த ஈயேல் என்பவன் எரிகோவைத் திரும்பக் கட்டினான். நூனின் மகன் யோசுவா மூலம் கூறப்பட்ட யெகோவாவின் வார்த்தையின்படியே, ஈயேல் அஸ்திபாரங்களை போடும்போது தன் மூத்த மகன் அபிராமை சாகக்கொடுத்தான். வாசல்களை அமைக்கும்போது இளையமகன் செகூப்பையும் சாகக்கொடுத்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுடைய நாட்களிலே பெத்தேல் ஊரைச்சேர்ந்த ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் மகனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன்னுடைய மூத்த மகனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன்னுடைய இளைய மகனையும் சாகக்கொடுத்தான்.
Tamil Bible Romanised 2017
avan naadka'lilea beththeal ooraanaagiya eeyeal erigoavaik kattinaan; karththar noonin kumaaranaagiya yoasuvaavaikko'ndu solliyiruntha vaarththaiyinpadiyea, avan athin asthibaaraththaip poadugi'rapoathu, abiraam ennum than mooththa kumaaranaiyum, athin vaasalga'lai vaikki'rapoathu segoob ennum than i'laiyakumaaranaiyum saagakkoduththaan.
Tamil OV
அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவனது காலத்தில், ஈயேல் எனும் பெத்தேல் ஊரான் எரிகோவைக்கட்டினான். அப்போது, அவனது மூத்தகுமாரனான அபிராம் மரித்தான். நகர வாயில்களை அமைக்கும் போது, இளைய குமாரன் செகூப் மரித்தான். நூனின் குமாரனான யோசுவாவின் மூலமாகப் பேசியபொழுது இது நடக்குமென்று கர்த்தர் சொன்னைதைப்போலவே இது நடந்தது.