1 Kings 18:27 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மத்தியானவேளையில் எலியா அவர்களை கேலிசெய்து: உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்; அவன் தெய்வமாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது வேலையாக இருப்பான்; அல்லது பயணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக இருக்கும் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மத்தியானமானபோது எலியா அவர்களைக் கேலிசெய்யத் தொடங்கினான். “இன்னும் பலமாகச் சத்தமிடுங்கள். அவன் ஒரு தெய்வம்தான். ஒருவேளை அவன் ஆழமாக யோசித்துக்கொண்டிருப்பான் அல்லது வேலைகள் செய்துகொண்டிருப்பான் அல்லது தூரப்பயணம் போயிருப்பான் அல்லது நித்திரையாயிருந்தால் யாரும் அவனை எழுப்பவேண்டியதாயிருக்கும்” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மத்தியானவேளையில் எலியா அவர்களை கேலிசெய்து: உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்; அவன் தெய்வமாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது வேலையாக இருப்பான்; அல்லது பயணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக இருக்கும் என்றான்.
Tamil Bible Romanised 2017
maththiyaanavea'laiyilea eliyaa avarga'laip pariyaasampa'n'ni: uraththa saththamaayk kooppidungga'l; avan theavanaamea, avan thiyaanaththil iruppaan; allathu aluvalaayiruppaan; allathu pirayaa'nampoayiruppaan; allathu thoongginaalum thoongguvaan; avanai ezhuppavea'ndiyathaakkum en'raan.
Tamil OV
மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம் போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எலியா மத்தியானத்தில் அவர்களைக் கேலிச் செய்தான், “உண்மையில் பாகால் தெய்வமானால் சத்தமாக ஜெபியுங்கள்! அவர் ஒருவேளை தியானத்தில் இருப்பார்! அல்லது வேறு வேலையில் இருப்பார்! அல்லது எங்காவது போயிருப்பார்! அல்லது தூங்கியிருப்பார்! எழுப்புங்கள்!” என்று கூறினான்.