1 Kings 20:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன்னுடைய படையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றுகையிட்டு அதின்மேல் யுத்தம்செய்தான்; அவனோடு முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்போது சீரிய அரசன் பெனாதாத் தன் முழு இராணுவப் படையையும் ஒன்றுதிரட்டினான். அவன் முப்பத்திரண்டு அரசர்கள், அவர்களுடைய குதிரைகள், தேர்கள் ஆகியவற்றுடன் போய், சமாரியாவை முற்றுகையிட்டுத் தாக்கினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன்னுடைய படையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றுகையிட்டு அதின்மேல் யுத்தம்செய்தான்; அவனோடு முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.
Tamil Bible Romanised 2017
seeriyaavin raajaavaagiya benaathaath than seanaiyaiyellaam koottikko'ndupoay, samaariyaavai mut'rikkaipoattu athinmeal yuththampa'n'ninaan; avanoadeakooda muppaththira'ndu raajaakka'l irunthathumallaamal, kuthiraiga'lum irathangga'lum irunthathu.
Tamil OV
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்; அவனோடேகூட முப்பதிரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பெனாதாத் ஆராமின் ராஜா. அவன் தனது படையைத் திரட்டி 32 ராஜாக்களோடும் குதிரைகளோடும் இரதங்களோடும் சமாரியாவைத் தாக்கி முற்றுகையிட்டான்.