1 Kings 20:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையைக் கேட்டு, தன்னுடைய ஆட்களை நோக்கி: யுத்தம் செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் யுத்தம்செய்ய ஆயத்தம்செய்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இச்செய்தி வந்தபோது தன் கூடாரத்தில் பெனாதாத் மற்ற அரசர்களோடுகூட குடித்துக்கொண்டிருந்தான். இதைக் கேட்டவுடன் தன் மனிதர்களிடம், “தாக்குவதற்கு ஆயத்தப்படுங்கள்” என்றான். அப்படியே அவர்கள் பட்டணத்தைத் தாக்குவதற்கு ஆயத்தமானார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கும்போது, இந்த வார்த்தையைக் கேட்டு, தன்னுடைய ஆட்களை நோக்கி: யுத்தம் செய்ய ஆயத்தம்செய்யுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் யுத்தம்செய்ய ஆயத்தம்செய்தார்கள்.
Tamil Bible Romanised 2017
benaathaaththum, mat'ra raajaakka'lum koodaarangga'lilea kudiththukko'ndirukkaiyil, intha vaarththaiyaik keattu, than oozhiyakkaararai noakki: aayaththampa'n'nungga'l en'raan; appadiyea nagaraththinmeal sa'ndaiseyya aayaththampa'n'ninaarga'l.
Tamil OV
பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கையில், இந்த வார்த்தையைக் கேட்டு, தன் ஊழியக்காரரை நோக்கி: ஆயத்தம்பண்ணுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் சண்டைசெய்ய ஆயத்தம்பண்ணினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கூடாரத்தில் பெனாதாத் மற்றவர்களோடு குடித்துக்கொண்டிருந்தான். அப்போது தூதுவர்கள் ஆகாபின் செய்தியைச் சொல்ல, சமாரியாவைத் தாக்கும்படி ஆணையிட்டான். படைகளும் நகர்ந்தன.