1 Kings 20:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் வந்து: அந்த ஏராளமான மக்கள்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே யெகோவா என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதற்கிடையில் இஸ்ரயேலின் அரசன் ஆகாபிடம் ஒரு இறைவாக்கினன் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘இந்தப் பெரும் படையைக் காண்கிறாயா? இன்றைக்கே அவர்கள் யாவரையும் உன் கையில் ஒப்புவிப்பேன். அப்பொழுது நான்தான் யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய்’ ” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடம் வந்து: அந்த ஏராளமான மக்கள்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Bible Romanised 2017
appozhuthu oru theerkkatharisi isravealin raajaavaagiya aagaabidaththil vanthu: antha earaa'lamaana janakkoottaththaiyellaam ka'ndaayaa? ithoa, naanea karththar en'ru nee a'riyumpadi in'raikku athai un kaiyil oppukkoduppean en'ru karththar sollugi'raar en'raan.
Tamil OV
அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் வந்து: அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அப்போது, ஆகாபிடம் ஒரு தீர்க்கதரிசி வந்து, “ராஜாவே, அந்த பெரும்படையைப் பார். நானே கர்த்தர், என்று நீ அறியும்படி நான் அப்படையை உன் மூலம் தோற்கடிப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார்.