1 Kings 20:25 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீர் சாகக்கொடுத்த வீரர்களுக்குச் சரியாக வீரர்களையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாகக் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாக இரதங்களையும் எண்ணிப் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்செய்து, நிச்சயமாக அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நாங்கள் சமபூமியில் இஸ்ரயேலருடன் யுத்தம் செய்யும்படியாக, நீர் இழந்த இராணுவத்தைப்போல் குதிரைக்குக் குதிரையும், தேருக்கு தேருமாக ஒரு இராணுவத்தை உருவாக்கும். அப்பொழுது நாங்கள் அவர்களைப்பார்க்கிலும் பலமுள்ளவர்களாயிருப்போம்” என்று ஆலோசனை கொடுத்தார்கள். அரசன் அதற்கு உடன்பட்டு அதன்படியே நடந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீர் சாகக்கொடுத்த வீரர்களுக்குச் சரியாக வீரர்களையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாகக் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாக இரதங்களையும் எண்ணிப் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்செய்து, நிச்சயமாக அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.
Tamil Bible Romanised 2017
neer madiyakkoduththa seanaikkuch sariyaaych seanaiyaiyum, anthak kuthiraiga'lukkuch sariyaayk kuthiraiga'laiyum, irathangga'lukkuch sariyaay irathangga'laiyum ilakkampaarththukko'l'lum; pi'rpaadu samaboomiyilea naam avarga'loadu yuththampa'n'ni, nichchayamaay avarga'lai mea'rko'lvoam en'raarga'l; avan avarga'l so'rkeattu appadiyea seythaan.
Tamil OV
நீர் மடியக்கொடுத்த சேனைக்குச் சரியாய்ச் சேனையையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாய்க் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாய் இரதங்களையும் இலக்கம் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்பண்ணி, நிச்சயமாய் அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இப்போது நீ அழிக்கப்பட்ட ஒரு படையை கூட்ட வேண்டும். இரதங்களையும் குதிரைகளையும் சேர்க்க வேண்டும். சமவெளியில் சண்டையிட வேண்டும். பிறகு வெல்வோம்” என்றனர். அவர்கள் சொன்னபடியே பெனாதாத்தும் செய்தான்.