1 Kings 20:28 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது தேவனுடைய மனிதன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: யெகோவா பள்ளத்தாக்குகளின் தேவனாக இல்லாமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர்கள் சொல்லியிருக்கிறபடியால், நான் இந்த ஏராளமான மக்கள் கூட்டத்தையெல்லாம் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே யெகோவா என்று நீங்கள் அறிவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவனுடைய மனிதன் இஸ்ரயேல் அரசனிடம் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘யெகோவாவே மலைகளின் தெய்வம் என்றும், பள்ளத்தாக்கின் தெய்வம் அல்ல என்றும் சீரியா நினைப்பதால் இந்தப் பெரும் படையை உன் கையில் கொடுப்பேன். அதனால் நீயும் நானே யெகோவா என்று அறிந்துகொள்வாய்’ என்கிறார்” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது தேவனுடைய மனிதன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாக இல்லாமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர்கள் சொல்லியிருக்கிறபடியால், நான் இந்த ஏராளமான மக்கள் கூட்டத்தையெல்லாம் உன்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Bible Romanised 2017
appozhuthu theavanudaiya manushan oruvan vanthu, isravealin raajaavaip paarththu: karththar pa'l'laththaakkuga'lin theavanaayiraamal, malaiga'lin theavanaayirukki'raar en'ru seeriyar solliyirukki'rapadiyinaal, naan intha earaa'lamaana janakkoottaththaiyellaam un kaiyil oppukkoduththean; athinaal naanea karththar en'ru neengga'l a'riveerga'l en'ru karththar sollugi'raar en'raan.
Tamil OV
அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இஸ்ரவேல் ராஜாவிடம் தேவமனிதன் ஒருவன் கீழ்க்கண்ட செய்திகளோடு வந்தான். கர்த்தர் சொன்னார், “‘கர்த்தராகிய நான் மலைகளின் தேவன் என்று ஆராமியர் சொன்னார்கள். சமவெளிப் பிரதேசங்களுக்கு நான் தேவன் அல்ல’ என்று அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே இந்த பெரும் படையைத் தோற்கடிக்க உன்னை அனுமதிக்கிறேன். பிறகு நீங்கள் அனைவரும் எல்லா இடங்களுக்கும் நானே கர்த்தர் என்பதை உணர்வீர்கள்.”