1 Kings 20:29 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏழுநாட்கள்வரை அவர்கள் நேருக்கு நேராக முகாமிட்டிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் துவங்கி, இஸ்ரவேல் மக்கள் ஒரே நாளிலே சீரியர்களில் ஒரு 1,00,000 காலாட்களைக் கொன்றுபோட்டார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏழு நாட்களாக இரு படைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமாக முகாம் அமைத்திருந்து, ஏழாம்நாளில் யுத்தத்தைத் தொடங்கினர். இஸ்ரயேலர் ஒரு நாளிலேயே ஒரு இலட்சம் சீரிய காலாட்படை வீரரைக் கொன்றனர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏழுநாட்கள்வரை அவர்கள் நேருக்கு நேராக முகாமிட்டிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் துவங்கி, இஸ்ரவேல் மக்கள் ஒரே நாளிலே சீரியர்களில் ஒரு இலட்சம் காலாட்களைக் கொன்றுபோட்டார்கள்.
Tamil Bible Romanised 2017
eazhunaa'la'lavum avarga'l mugamugamaayp paa'layami'ranggiyirunthaarga'l; eazhaam naa'lil yuththam kalanthu, israveal puththirar oreanaa'lilea seeriyaril ladcham kaalaadka'lai madanggadiththaarga'l.
Tamil OV
ஏழுநாளளவும் அவர்கள் முகமுகமாய்ப் பாளயமிறங்கியிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரே நாளிலே சீரியரில் இலட்சம் காலாட்களை மடங்கடித்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
படைகள் ஒன்றுக்கொன்று எதிராக ஏழு நாட்கள் முகாமிட்டிருந்தன. ஏழாவது நாள் போர் தொடங்கியது, ஒரே நாளில் 1,00,000 பேரை இஸ்ரவேலர்கள் கொன்றனர்.