1 Kings 20:42 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது இவன் அவனை நோக்கி: கொலைசெய்வதற்கு நான் நியமித்த மனிதனை உன்னுடைய கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டதால், உன்னுடைய உயிர் அவனுடைய உயிருக்கு ஈடாகவும், உன்னுடைய மக்கள் அவனுடைய மக்களுக்கு இணையாகவும் இருக்கும் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவாக்கினன் அரசனைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: சாகவேண்டுமென்று நான் தீர்மானித்த ஒருவனை நீ விடுதலையாக்கினாய். ஆகையினால் அவனுடைய உயிருக்காக உன் உயிரும், அவனுடைய மக்களுக்காக உன் மக்களும் சாகவேண்டும்” என்று கூறினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது இவன் அவனை நோக்கி: கொலைசெய்வதற்கு நான் நியமித்த மனிதனை உன்னுடைய கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டதால், உன்னுடைய உயிர் அவனுடைய உயிருக்கு ஈடாகவும், உன்னுடைய மக்கள் அவனுடைய மக்களுக்கு இணையாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Bible Romanised 2017
appozhuthu ivan avanai noakki: sanggaaraththi'rku naan niyamiththa manushanai un kaiyilirunthu thappippoagumpadi nee vittapadiyinaal, un piraa'nan avan piraa'nanukku eedaagavum, un janam avan janaththi'rku eedaagavum irukkum en'ru karththar sollugi'raar en'raan.
Tamil OV
அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தீர்க்கதரிசி ராஜாவிடம், “கர்த்தர் உம்மிடம், ‘நான் உன்னிடம், மரிக்க வேண்டும் என்று சொன்னவனை விடுதலைச் செய்தாய். எனவே நீ அவனது இடத்தை அடுத்து நீ மரிப்பாய்! உனது ஜனங்கள் அவர்களின் பகைவர்களது இடத்தை எடுப்பார்கள். உன் ஜனங்களும் மரிப்பார்கள்!’ என்று சொல்லச்சொன்னார்” என்றான்.