1 Kings 22:11 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களைத் தள்ளி அழித்துப்போடுவீர் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது கெனானாவின் மகன் சிதேக்கியா இரும்பினால் கொம்புகளைச் செய்து அவர்களைப் பார்த்து, “யெகோவா சொல்வது இதுவே: இந்த இரும்புக் கொம்புகளால் சீரியர் முழுவதுமாக அழியும்வரைக்கும் அவர்களைக் குத்திக் கொல்வீர்கள்” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கேனானாவின் மகனாகிய சிதேக்கியா தனக்கு இரும்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியர்களைத் தள்ளி அழித்துப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Bible Romanised 2017
keanaanaavin kumaaranaagiya sitheakkiyaa thanakku iruppukkombuga'lai u'ndaakki, ivaiga'laal neer seeriyarai mutti nirmoolamaakkip poaduveer en'ru karththar sollugi'raar en'raan.
Tamil OV
கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்களில் ஒருவன் பெயர் சிதேக்கியா, இவன் கேனானாவின் குமாரன். அவன் இரும்பு கொம்புகளைச் செய்து, “இதனை நீங்கள் பயன்படுத்தி போரிடுங்கள். உங்களால் வெற்றிபெற முடியுமென்று கர்த்தர் சொன்னார்” என்று கூறினான்.