1 Kings 6:24 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கேருபீனுக்கு இருக்கிற ஒரு இறக்கை 7.6 அடி கேருபீனின் மற்ற இறக்கை 7.6 அடியாக, இப்படி ஒரு இறக்கையின் கடைசிமுனை தொடங்கி மற்ற இறக்கையின் கடைசி முனைவரை 15 அடியாக இருந்தது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
முதலாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாயும், அதன் மறு சிறகு ஐந்து முழமாயும் இருந்தன. ஒரு சிறகின் கடைசிமுனை தொடங்கி மற்ற சிறகின் கடைசி முனைவரை பத்து முழமாய் இருந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கேருபீனுக்கு இருக்கிற ஒரு இறக்கை ஐந்துமுழமும் கேருபீனின் மற்ற இறக்கை ஐந்து முழமுமாக, இப்படி ஒரு இறக்கையின் கடைசிமுனை தொடங்கி மற்ற இறக்கையின் கடைசி முனைவரை பத்துமுழமுமாக இருந்தது.
Tamil Bible Romanised 2017
kearubeenukku irukki'ra oru settai ainthu muzhamum kearubeenin mat'rach settai ainthu muzhamumaay, ippadi oru settaiyin kadaisimunaithodanggi mat'rach settaiyin kadaisimunaimattum paththu muzhamaayirunthathu.
Tamil OV
கேருபீனுக்கு இருக்கிற ஒருசெட்டை ஐந்துமுழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசிமுனை தொடங்கி மற்றச் செட்டையின் கடைசி முனை மட்டும் பத்துமுழமாயிருந்தது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இரு கேருபீன்களும் ஒரே மாதிரி ஒரே முறையில் செய்யப்பட்டவை. ஒவ்வொரு கேருபீனுக்கும் இரு சிறகுகள் இருந்தன. ஒவ்வொரு சிறகும் 7 1/2 அடி நீளமுடையவை. ஒரு சிறகின் நுனியிலிருந்து இன்னொரு சிறகின் நுனிவரை 15 அடி இருந்தன. ஒவ்வொரு கேருபீனும் 15 அடி உயரம் இருந்தன.