1 Peter 3:1 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மனைவிகளே, அவ்வாறே நீங்களும் உங்கள் சொந்த கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது வசனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்தாலும், வசனமில்லாமலே அவர்களின் மனைவியின் நடத்தையினால் ஒருவேளை ஆதாயப்படுத்தக்கூடும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மனைவிமாரே! அவ்வாறே நீங்களும் உங்கள் கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்போது அவர்களில் எவராவது வேதவசனத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவராக இருந்தாலும், நீங்கள் ஒரு வார்த்தைகூட பேச அவசியமில்லாமல் உங்கள் நடத்தையினால் அவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ள முடியுமாக இருக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்தப்படி மனைவிகளே, உங்களுடைய சொந்தக் கணவர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாக இருந்தால், பயபக்தியான உங்களுடைய கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
Tamil Bible Romanised 2017
anthappadi manaiviga'lea, ungga'l sonthap purusharga'lukkuk keezhppadinthirungga'l; appozhuthu avarga'lil yaaraavathu thiruvasanaththi'rkuk keezhppadiyaathavarga'laayirunthaal, bayabakthiyoadu koodiya ungga'l ka'rpu'l'la nadakkaiyai avarga'l paarththu,
Tamil OV
அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவ்வாறே மனைவியராகிய நீங்கள், உங்கள் கணவன்மாரின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். தேவனுடைய போதனைகளை உங்களில் சிலரது கணவன்மார்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் கூட, எப்பேச்சுமில்லாமல் தம் நடத்தையின் மூலம் அவர்களின் மனைவிமார்கள் அவர்களை வலியுறுத்தவேண்டும்.