1 Samuel 14:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது சவுல் தன்னோடு இருக்கிற மக்களைப் பார்த்து: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று கணக்கெடுங்கள் என்றான்; அவர்கள் கணக்கெடுக்கிறபோது, இதோ, யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது சவுல் தன்னுடன் இருந்த வீரர்களிடம், “நம்மிடமிருந்தவர்களில் யார் எங்களைவிட்டுப் போய்விட்டார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள்” என்றான். அப்படியே அவர்கள் கணக்கிட்டுப் பார்த்தபோது, யோனத்தானும் அவனுடைய ஆயுதம் சுமப்பவனும் இல்லையென்று கண்டார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது சவுல் தன்னோடு இருக்கிற மக்களைப் பார்த்து: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று கணக்கெடுங்கள் என்றான்; அவர்கள் கணக்கெடுக்கிறபோது, இதோ, யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
Tamil Bible Romanised 2017
appozhuthu savul thannoadeakooda irukki'ra janangga'lai noakki: nammidaththilirunthu poanavarga'l yaar en'ru ilakkampaarungga'l en'raan; avarga'l ilakkam paarkki'rapoathu, ithoa, yoanaththaanum avan aayuthathaariyum anggea illai en'ru ka'ndaarga'l.
Tamil OV
அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம் பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சவுல், “நம்மவர்களை எண்ணிக் கணக்கிடுங்கள். முகாமிற்கு வெளியே யார் போனது என்று தெரியவேண்டும்” என்றான். அவர்கள் ஆட்களின் தொகையைக் கணக்கிட்டனர். யோனத்தானும் அவனது உதவியாளனும் காணவில்லை.