1 Samuel 2:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து: “என்னுடைய இருதயம் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது; என்னுடைய பெலன் யெகோவாவுக்குள் உயர்ந்திருக்கிறது; என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது அன்னாள் இவ்வாறு சொல்லி ஜெபித்தாள்: “யெகோவாவுக்குள் என் இருதயம் மகிழ்ச்சியடைகிறது; யெகோவாவுக்குள் என் தலை நிமிர்ந்திருக்கிறது. என் வாய் என் பகைவருக்கு மேலாகப் பெருமிதம் பேசுகிறது; ஏனெனில் உமது மீட்பில் நான் மகிழ்கிறேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து: என்னுடைய இருதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது; என்னுடைய பெலன் கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
Tamil Bible Romanised 2017
appozhuthu annaa'l jebampa'n'ni: en iruthayam karththarukku'l ka'likoorugi'rathu; en kombu karththarukku'l uyarnthirukki'rathu; en pagaignarinmeal en vaay thi'ranthirukki'rathu; ummudaiya iradchippinaalea santhoashappadugi'rean.
Tamil OV
அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அன்னாள் ஜெபம் பண்ணி, “என் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது! நான் என் தேவனுக்குள் மிக்க பலத்துடன் இருப்பதை உணருகிறேன்! என் எதிரிகளைக் கண்டு நகைக்கிறேன். உமது இரட்சிப்பினாலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்!