2 Chronicles 30:21 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் மக்கள் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களும் மகா ஆனந்தத்தோடு கொண்டாடினார்கள்; லேவியர்களும் ஆசாரியர்களும் அனுதினமும் கர்த்தருக்கென்று பேரோசையாகத் தொனிக்கும் கீதவாத்தியங்களால் யெகோவாவை துதித்துக்கொண்டிருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எருசலேமுக்கு வந்திருந்த இஸ்ரயேலர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களுக்கு பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். ஒவ்வொரு நாளும் லேவியர்களும் ஆசாரியரும் யெகோவாவைத் துதிப்பதற்கான வாத்தியங்களை இசைத்து யெகோவாவைத் துதித்துப் பாடினார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் மக்கள் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாட்களும் மகா ஆனந்தத்தோடு கொண்டாடினார்கள்; லேவியர்களும் ஆசாரியர்களும் அனுதினமும் கர்த்தருக்கென்று பேரோசையாகத் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
appadiyea erusaleamilea kaa'nappatta israveal puththirar pu'lippillaatha appappa'ndigaiyai eazhunaa'la'lavum mahaa aananthaththoadea aasariththaarga'l; leaviyarum aasaariyarum thinanthinam karththarukken'ru pearoasaiyaayth thonikkum keethavaaththiyangga'laal karththaraith thuthiththukko'ndirunthaarga'l.
Tamil OV
அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளளவும் மகா ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்; லேவியரும் ஆசாரியரும் தினந்தினம் கர்த்தருக்கென்று பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இஸ்ரவேலின் ஜனங்கள் எருசலேமில் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை 7 நாட்கள் கொண்டாடினார்கள். அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். லேவியர்களும், ஆசாரியர்களும் தினந்தோறும் கர்த்தரைத் தங்கள் முழுபலத்தோடு போற்றித் துதித்தனர்.