2 Chronicles 6:41 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவனாகிய யெகோவாவே, உம்முடைய தங்கும் ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய யெகோவாவே, உமது ஆசாரியர்கள் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே எழுந்திரும், நீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன், உமது தங்கும் இடத்திற்கு வாரும். இறைவனாகிய யெகோவாவே, உமது ஆசாரியர்கள் இரட்சிப்பை உடுத்திக்கொள்ளட்டும். உமது பரிசுத்தவான்கள் உமது நன்மைகளில் மகிழ்வார்களாக.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தங்கும் ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.
Tamil Bible Romanised 2017
theavanaagiya karththaavea, ummudaiya thaabara sthalaththi'rkuth theavareer umathu vallamai vi'langgum pettiyudan ezhuntharu'lum; theavanaagiya karththaavea, umathu aasaariyar iradchippaith thariththu, ummudaiya parisuththavaanga'l nanmaiyilea magizhvaarga'laaga.
Tamil OV
தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“இப்போது தேவனாகிய கர்த்தாவே! எழுந்திரும். உம்முடைய பலத்தைக் காட்டும். இந்த உடன்படிக்கைப் பெட்டி வீற்றிருக்கும் இடத்திற்கு வருக! உம்முடைய ஆசாரியர்கள் இரட்சிப்பின் ஆடையை அணியட்டும். இத்தகைய நல்ல காரியங்களைப்பற்றி உம்முடைய உண்மையான தொண்டர்கள் மகிழட்டும்.