2 Corinthians 1:14 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கர்த்தராகிய இயேசு வரும்நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்போம் என்பதை ஓரளவு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீங்கள் எங்களை ஓரளவு புரிந்துகொண்டிருப்பதுபோல, ஒரு நாளில் முழுமையாய் எங்களை புரிந்துகொள்வீர்கள் என்பதேயாகும். அப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் நாளில், நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமிதம்கொள்வதுபோல, நீங்களும் எங்களைக் குறித்தும் பெருமிதம் கொள்வீர்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
நாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் ஓரளவே புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமிதம்கொள்வது போலவே நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமிதம்கொள்ளும் அளவுக்கு, ஆண்டவர் இயேசுவின் நாளில் நீங்கள் எங்களை முழுமையாய் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பு ஆகும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தராகிய இயேசு வரும்நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாக இருப்போம் என்பதை ஓரளவு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
Tamil Bible Romanised 2017
karththaraagiya iyeasuvinudaiya naa'lilea neengga'l engga'lukkup pugazhchchiyaayiruppathupoala, naangga'lum ungga'lukkup pugazhchchiyaayirukki'rathai oruvaa'ru oththukko'ndirukki'reerga'lea.
Tamil OV
கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எங்களைப் பற்றி ஏற்கெனவே சில காரியங்களை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதைப் போல இதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம். எங்களுக்காகப் பெருமை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது உங்களுக்காக நாங்கள் பெருமைப்படுவதைப் போன்றிருக்கும்.