2 Corinthians 1:24 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாக இல்லாமல், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து நிற்பதால், உங்களுடைய சந்தோஷத்திற்கு உதவியாக இருக்கிறோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நாங்கள் உங்கள் விசுவாசத்தின்மேல் அதிகாரம் செலுத்த விரும்பவில்லை. உங்கள் மகிழ்ச்சிக்காகவே உங்களுடன் ஒத்துழைக்கிறோம். ஏனெனில், நீங்கள் விசுவாசத்திலேயே உறுதியாய் நிற்கிறீர்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இப்படியாக, நாங்கள் உங்களது விசுவாசத்தின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றவர்களாக இல்லாமல், நீங்கள் உங்களது விசுவாசத்தில் உறுதியாக இருப்பதால், உங்களுடன் இணைந்து, உங்கள் மனமகிழ்ச்சிக்காகச் செயற்படுகின்றவர்களாகவே இருக்கின்றோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உங்களுடைய விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாக இல்லாமல், நீங்கள் உங்களுடைய விசுவாசத்தில் நிலைத்து நிற்பதால், உங்களுடைய சந்தோஷத்திற்கு உதவியாக இருக்கிறோம்.
Tamil Bible Romanised 2017
ungga'l visuvaasaththi'rku naangga'l athigaariga'laayiraamal, ungga'l santhoashaththi'rkuch sagaayaraayirukki'roam; visuvaasaththinaalea nilaini'rki'reerga'lea.
Tamil OV
உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நாங்கள் உங்கள் விசுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்று நான் எண்ணவில்லை. நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலமாய் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு பணிபுரிபவர்களாக இருக்கிறோம்.