2 Corinthians 13:10 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகவே, இடித்துப்போடுவதற்கு அல்ல, உறுதியாகக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடம் வரும்போது, உங்களைக் கண்டிக்காமல் இருப்பதற்காக, நான் தூரத்தில் இருக்கும்போதே இவைகளை எழுதுகிறேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் உங்களிடம் வரும்போது, எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரத்துடன் உங்களுடன் கடுமையாக நடந்துகொள்ள விரும்பவில்லை, உங்களைவிட்டுத் தூரமாய் இருக்கும்போது இவைகளைப் பற்றி நான் எழுதுகிறேன். கர்த்தர் எனக்குக் கொடுத்திருக்கிற அதிகாரம், உங்களை இடித்து வீழ்த்துவதற்குக் கொடுக்கப்படவில்லை, உங்களைக் கட்டி எழுப்புவதற்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவைகளை நான் தூரமாய் இருக்கும்போதே எழுதுகிறேன். அதற்குக் காரணம், நான் உங்களிடம் வரும்போது கர்த்தர் எனக்குத் தந்திருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, உங்களோடு கடுமையாக நடந்துகொள்ள விரும்பவில்லை. உங்களை இடித்துப் போடுவதற்காக அன்றி உங்களை கட்டியெழுப்புவதற்காகவே எனக்கு அந்த அதிகாரம் தரப்பட்டிருக்கிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆகவே, இடித்துப்போடுவதற்கு அல்ல, உறுதியாகக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடம் வரும்போது, உங்களைக் கண்டிக்காமல் இருப்பதற்காக, நான் தூரத்தில் இருக்கும்போதே இவைகளை எழுதுகிறேன்.
Tamil Bible Romanised 2017
aanathaal idiththuppoadavalla, oon'rak kattavea karththar enakkuk koduththa athigaaraththinpadi, naan ungga'lidaththil vanthirukkumpoathu, ka'ndithampa'n'naathapadikku, naan thooramaayirunthu ivaiga'lai ezhuthugi'rean.
Tamil OV
ஆனதால் இடித்துப்போட அல்ல, ஊன்றக்கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நாங்கள் உங்களோடு இல்லாததால் இதை எழுதுகிறேன். எனவே உங்களிடம் வரும்போது என்னிடம் உள்ள ஆற்றலைப் பயன்படுத்தி உங்களைத் தண்டிக்கமாட்டேன். கர்த்தர் எனக்கு உங்களைப் பலப்படுத்தவே வல்லமை கொடுத்துள்ளார். உங்களை அழிக்க அல்ல.