2 Corinthians 6:15 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கிறிஸ்துவுக்கும், சாத்தானுக்கும் இடையே என்ன இணக்கம் இருக்கிறது? விசுவாசிக்கும், அவிசுவாசிக்கும் இடையில் பொதுவானது என்ன இருக்கிறது?
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும் இடையே இணக்கமுண்டோ? விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் இடையில் பொதுத் தன்மையுண்டோ?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கிறிஸ்துவிற்கும் பேலியாளுக்கும் ஒப்பந்தம் ஏது? அவிசுவாசியுடன் விசுவாசிக்குப் பங்கு ஏது?
Tamil Bible Romanised 2017
ki'risthuvukkum bealiyaa'lukkum isaiveathu? avisuvaasiyudanea visuvaasikkup panggeathu?
Tamil OV
கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எப்படி கிறிஸ்துவும் சாத்தானும் உடன்பாடுகொள்ள முடியும்? ஒரு விசுவாசிக்கும், விசுவாசம் இல்லாதவனுக்கும் பொதுவாக என்ன இருக்க முடியும்?