2 Corinthians 7:14 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாக நான் அவனுடன் சொன்ன எதைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சத்தியமாகச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாகச் சொன்னதும் சத்தியமாக விளங்கினதே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் உங்களைக்குறித்து பெருமைக்குரிய விதமாகவே, அவனுக்குச் சொல்லியிருந்தேன். நீங்களும் என்னை அவற்றில் வெட்கப்படுத்தவில்லை. நாங்கள் எப்பொழுதும், உங்களுடன் உண்மையையேப் பேசினோம். அதுபோலவே, தீத்துவுடன் நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமையாகப் பேசியதும் உண்மையாயிற்று.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
உங்களைக் குறித்து அவனிடம் நான் பெருமையாகச் சொல்லி இருந்தவைகளைக் குறித்து, நான் வெட்கித் தலைகுனியும்படி நீங்கள் வைக்கவில்லை. அத்தோடு, நாங்கள் உங்களுடன் பேசிய அனைத்தும் உண்மையாக இருந்தது போல, உங்களைக் குறித்து தீத்துவுக்கு முன்பாக நாங்கள் பெருமையாகப் பேசியதும் உண்மையாயிற்று.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாக நான் அவனுடன் சொன்ன எதைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சத்தியமாகச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாகச் சொன்னதும் சத்தியமாக விளங்கினதே.
Tamil Bible Romanised 2017
ippadiyirukka, ungga'lukkup pugazhchchiyaay naan avanudanea sonna yaathon'raikku'riththum, vedkappadamaattean; naangga'l sagalaththaiyum ungga'lukkuch saththiyamaaych sonnathupoala, theeththuvudanea naangga'l ungga'lukkup pugazhchchiyaaych sonnathum saththiyamaaga vi'langgit'rea.
Tamil OV
இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாய் நான் அவனுடனே சொன்ன யாதொன்றைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாய்ச் சொன்னதும் சத்தியமாக விளங்கிற்றே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உங்களைப் பற்றி தீத்துவிடம் பெருமையாகச் சொன்னவை அனைத்தும் உண்மை என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு நாங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகும்.