2 Corinthians 8:10 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மட்டுமில்லை, செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டு கடந்த வருடத்தில் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாக இருக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே, இந்த விஷயத்தில் உங்களுக்கு எது சிறந்தது என்பதற்கு நான் கொடுக்கும் ஆலோசனை இதுவே: கடந்த வருடத்திலும் முதலாவதாகக் கொடுத்ததும் நீங்களே, கொடுப்பதற்கு ஆசை கொண்டவர்களும் நீங்களே.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
எனவே, இந்த விடயத்தில் இதுவே நான் உங்களுக்குக் கொடுக்கும் சிறப்பான ஆலோசனை; இது உங்களுக்கு நன்மை தரும். ஒரு வருடத்துக்கு முன்பு இந்த வேலையை நீங்கள் தொடங்கி, அதை மிகுந்த ஆர்வத்துடன் செய்ய ஆரம்பித்தீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மட்டுமில்லை, செய்யவேண்டும் என்று விருப்பப்பட்டு கடந்த வருடத்தில் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாக இருக்கும்.
Tamil Bible Romanised 2017
ithaikku'riththu en yoasanaiyai ungga'lukku a'rivikki'rean; ithaich seygi'ratha'rku maaththiramalla, seyyavea'ndumen'ru u'rchaagappadugi'ratha'rkum oru varushamaay aarambampa'n'nina ungga'lukku ithu thaguthiyaayirukkum.
Tamil OV
இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒரு வருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உங்கள் நன்மைக்காகவே நீங்கள் இதைச் செய்ய வேண்டுமென நான் சொல்ல விரும்புகிறேன். சென்ற ஆண்டில் கொடுக்க விரும்பியதில் நீங்களே முதலாவதாக இருந்தீர்கள். அது போல் கொடுப்பதிலும் முதலாவதாக இருந்தீர்கள்.