2 Corinthians 9:4 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மக்கெதோனியர்கள் என்னோடு வந்து, நீங்கள் ஆயத்தப்படாதவர்களாக இருப்பதைப் பார்த்தால், இவ்வளவு உறுதியாக உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்கள் என்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாக இருக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மக்கெதோனியாவிலுள்ளவர்களில் யாராவது என்னுடன் வரும்போது, நீங்கள் ஆயத்தமாய் இல்லையெனக் கண்டால், நாங்கள் உங்களில் வைத்த மனவுறுதியின் நிமித்தம் வெட்கப்பட நேரிடும் எனச் சொல்லவேண்டியதில்லை. நீங்களும் வெட்கப்பட்டுப் போவீர்களே.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இல்லையென்றால், மக்கெதோனியாவில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் என்னுடன் வந்து உங்களை ஆயத்தமற்றவர்களாகக் கண்டால், உங்களில் இந்தளவு நம்பிக்கை வைத்ததற்காக நாங்கள் வெட்கித் தலைகுனிய நேரிடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை, அதுபோல நீங்களும் வெட்கித் தலைகுனிவீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மக்கெதோனியர்கள் என்னோடு வந்து, நீங்கள் ஆயத்தப்படாதவர்களாக இருப்பதைப் பார்த்தால், இவ்வளவு உறுதியாக உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்கள் என்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாக இருக்கும்.
Tamil Bible Romanised 2017
makkethoaniyar ennudaneakooda vanthu, ungga'lai aayaththappadaathavarga'laagak ka'ndaal, ivva'lavu nichchayamaay ungga'laip pugazhnthatha'rkaaga, neengga'l vedkappaduveerga'len'ru naangga'l sollaamal, naangga'lea vedkappadavea'ndiyathaayirukkum.
Tamil OV
மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் சில மக்கதோனியர்களோடு அங்கே வரும்போது நீங்கள் தயாராய் இல்லாமல் இருந்தீர்களெனில் அதனால் எனக்கு மிகவும் வெட்கம் உண்டாகும். ஏனென்றால் உங்களைப் பற்றி அவ்வளவு உறுதியாகக் கூறியிருக்கிறேன். (அது உங்களுக்கும் அவமானத்தைத் தரும்.)