2 John 1:12 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனம் இல்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருப்பதற்காக உங்களிடம் வந்து, முகமுகமாகப் பேசலாம் என்று நம்பியிருக்கிறேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் நான் அவற்றை மையினால் காகிதங்களில் எழுத விரும்பவில்லை. நான் உங்களைச் சந்தித்து, நேரடியாகவே அவற்றைக்குறித்துப் பேச விரும்புகிறேன். அப்பொழுதே நமது சந்தோஷம் முழுநிறைவுபெறும்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
உங்களுக்கு எழுத வேண்டிய விடயங்கள் அநேகம் உள்ளன. அதற்காக நான் மையையும் காகிதத்தையும் பயன்படுத்த விரும்பவில்லை. நான் உங்களை நேருக்கு நேராக சந்தித்து பேசவே விரும்புகிறேன். அப்போது நமது மகிழ்ச்சி நிறைவாயிருக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனம் இல்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருப்பதற்காக உங்களிடம் வந்து, முகமுகமாகப் பேசலாம் என்று நம்பியிருக்கிறேன்.
Tamil Bible Romanised 2017
ungga'lukku ezhuthavea'ndiya kaariyangga'l aneagamu'ndu; kaagithaththinaalum maiyinaalum avaiga'lai ezhutha enakku manathillai. ungga'ludaiya santhoasham ni'raivaayirukkumpadikku ungga'lidaththil vanthu, mugamugamaayp peasalaamen'ru nambiyirukki'rean.
Tamil OV
உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் உங்களிடம் கூற வேண்டியது மிகுதி. ஆனால் தாளையும், மையையும் பயன்படுத்த விரும்பவில்லை. பதிலாக, உங்களிடம் வர எண்ணுகிறேன். அப்போது நாம் ஒருமித்துப் பேச இயலும். அது நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.