2 Kings 11:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது யோய்தா, அவர்கள் யெகோவாவுடைய மக்களாயிருக்கும்படிக்கு, ராஜாவும் மக்களும் கர்த்தரோடே உடன்படிக்கைசெய்யவும், ராஜாவும் மக்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைசெய்யவும் செய்து,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதன்பின் யோய்தா இஸ்ரயேல் மக்கள் யெகோவாவின் மக்களாயிருக்கும்படி யெகோவாவுக்கும், அரசனுக்கும், மக்களுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கையைச் செய்தான். அத்துடன் அரசனுக்கும் மக்களுக்கும் இடையிலும் ஒரு உடன்படிக்கையைச் செய்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய மக்களாயிருக்கும்படிக்கு, ராஜாவும் மக்களும் கர்த்தரோடே உடன்படிக்கைசெய்யவும், ராஜாவும் மக்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைசெய்யவும் செய்து,
Tamil Bible Romanised 2017
appozhuthu yoaythaa, avarga'l karththarudaiya janamaayirukkumpadikku, raajaavum janangga'lum karththaroadea udanpadikkaipa'n'navum, raajaavum janangga'lum oruvaroadoruvar udanpadikkaipa'n'navum seythu,
Tamil OV
அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கை பண்ணவும் செய்து,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு கர்த்தருக்கும் ராஜாவுக்கும் ஜனங்களுக்கும் இடையில் யோய்தா ஒரு ஒப்பந்தம் செய்தான். இதன்படி ராஜாவும் ஜனங்களும் கர்த்தருக்கு உரியவர்கள். பின் யோய்தா ராஜாவுக்கும் ஜனங்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் செய்தான். அதன்படி ராஜா ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டும், ஜனங்களும் ராஜாவுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும்.