2 Kings 16:14 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவின் சந்நிதியிலிருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் யெகோவாவின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முன்புறத்திலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாக வைத்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவுக்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம், புதிய பலிபீடத்துக்கும் யெகோவாவின் ஆலயத்துக்கும் நடுவில் இருந்தது. அதை ஆலயத்தின் முன் பக்கத்திலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, புதிய பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் வைத்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தரின் சந்நிதியிலிருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முன்புறத்திலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாக வைத்தான்.
Tamil Bible Romanised 2017
karththarin sannithiyil iruntha ve'ngalap balipeedaththai avan than balipeedaththi'rkum karththarin aalayaththi'rkum naduvea aalayaththin mugappilirunthu eduththu, athaith than balipeedaththi'rku vadapu'ramaay vaiththaan.
Tamil OV
கர்த்தரின் சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முகப்பிலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாய் வைத்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தருடைய முன்னிலையில் ஆலயத்தின் முன்னாலிருந்த வெண்கலப் பலி பீடத்தை ஆகாஸ் பெயர்த்தெடுத்தான். அந்த வெண்கலப் பலிபீடம் ஆகாஸின் பலிபீடத்திற்கும் கர்த்தருடைய ஆலயத்திற்கும் இடையில் இருந்தது. அந்த வெண்கலப் பலிபீடத்தைத் தனது பலிபீடத்திற்கு வடக்குப் பக்கத்தில் வைத்தான்.