2 Kings 8:16 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய ஐந்தாம் வருட ஆட்சியில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாக இருக்கும்போது, யோசபாத்தின் மகனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ஆட்சிசெய்யத் துவங்கினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் மகன் யோராம் இஸ்ரயேலை அரசாண்ட ஐந்தாம் வருடத்தில் யெகோராம் யூதாவுக்கு அரசனானான். அவன் யோசபாத்தின் மகன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் மகன் யோராமுடைய ஐந்தாம் வருடத்தில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாக இருக்கும்போது, யோசபாத்தின் மகனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ஆட்சிசெய்யத் துவங்கினான்.
Tamil Bible Romanised 2017
isravealin raajaavaagiya aagaabin kumaaran yoaraamudaiya ainthaam varushaththil, yoasapaath yoothaavilea innum raajaavaayirukkaiyil, yoasapaaththin kumaaranaagiya yoaraam ennum yoothaavin raajaa raajyabaarampa'n'nath thuvakkinaan.
Tamil OV
இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாயிருக்கையில், யோசபாத்தின் குமாரனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ராஜ்யபாரம்பண்ணத் துவக்கினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யூதாவில் யோசபாத்தின் குமாரனான யோராம் ராஜாவாக இருந்தான். இவனது ஐந்தாம் ஆட்சியாண்டில் ஆகாபின் குமாரனான யோராம் ராஜாவாக இருந்தபோது அவன் ஆளத் தொடங்கினான்.