2 Peter 2:15 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவர்கள் நேர்வழியை விட்டு விலகி, அநீதியை செய்து கூலியைப் பெற ஆசைப்பட்டவனான பேயோரின் மகன் பிலேயாமின் வழியைப் பின்பற்றும்படி போய்விட்டார்கள்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவர்கள் நேர்வழியைவிட்டு விலகி நடந்து, அநீதியான கூலியைப் பெற ஆசைப்பட்ட பேயோரின் மகன் பிலேயாமின் வழியைப் பின்பற்றினார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி,
Tamil Bible Romanised 2017
semmaiyaana vazhiyaivittuth thappinadanthu, beayoarin kumaaranaagiya bileayaamin vazhiyaip pinpat'rippoanavarga'l; avan aneethaththin kooliyai virumbi,
Tamil OV
செம்மையான வழியைவிட்டுத் தப்பி நடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இந்தப் போலிப் போதகர்கள் சரியான வழியிலிருந்து விலகி, தவறான வழிக்குச் சென்றார்கள். அவர்கள் பிலேயாம் சென்ற வழியைப் பின்பற்றினார்கள். பிலேயாம் பேயோரின் குமாரன். தவறு செய்ய மக்கள் கொடுக்கும் கூலியை அவன் நேசித்தான்.