2 Samuel 14:7 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வம்சத்தார்கள் எல்லோரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாக எழும்பி, தன்னுடைய சகோதரனைக் கொன்று போட்டவனை எங்களிடம் ஒப்புவி; அவன் கொன்ற அவனுடைய சகோதரனுடைய உயிருக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; ஒரே வாரிசாக இருந்தாலும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் கணவனின் பெயரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடி, எனக்கு இன்னும் மீதியாக இருக்கிற கடைசியாக எரிகிற சிறு நெருப்பையும் அணைத்துப்போட மனதாக இருக்கிறார்கள் என்றாள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இப்பொழுது எங்கள் வம்சம் எல்லாம் உமது அடியாளுக்கு எதிராக எழும்பி, ‘தன் சகோதரனைக் கொன்றவனை எங்களிடம் கொண்டுவா. அவன் கொலைசெய்த அவனுடைய சகோதரனின் உயிருக்காக அவனைக் கொலைசெய்யவேண்டும். சொத்துக்கு உரிமையாளனையும் அழிப்போம்’ என்கிறார்கள். இவ்வாறாக எனக்கு மிஞ்சியிருக்கும் அந்த ஒரே விளக்கை அணைத்து, என் கணவருக்கு பூமியின்மேல் பெயரும் சந்ததியும் இல்லாதபடி செய்வார்கள்” என்றாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வம்சத்தார்கள் எல்லோரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாக எழும்பி, தன்னுடைய சகோதரனைக் கொன்று போட்டவனை எங்களிடம் ஒப்புவி; அவன் கொன்ற அவனுடைய சகோதரனுடைய உயிருக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; ஒரே வாரிசாக இருந்தாலும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் கணவனின் பெயரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடி, எனக்கு இன்னும் மீதியாக இருக்கிற கடைசியாக எரிகிற சிறு நெருப்பையும் அணைத்துப்போட மனதாக இருக்கிறார்கள் என்றாள்.
Tamil Bible Romanised 2017
vamsaththaar ellaarum ummudaiya adiyaa'lukku viroathamaay ezhumbi, than sagoatharanaik kon'rupoattavanai oppi; avan kon'ra avan sagoatharanudaiya piraa'nanukkaaga naangga'l avanaik kon'rupoaduvoam; suthantharavaa'lanaayinum avanaiyum azhiththuppoaduvoam engi'raarga'l. ippadi en purushanukkup pearum neethiyum boomiyinmeal vaikkappadaathapadikku, enakku innum meethiyaayirukki'ra po'riyaiyum aviththuppoada manathaayirukki'raarga'l en'raa'l.
Tamil OV
வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரனைக் கொன்று போட்டவனை ஒப்பி; அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; சுதந்தரவாளனாயினும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடிக்கு, எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இப்போது எனது குடும்பத்தார் எனக்கு விரோதிகளாயிருக்கிறார்கள். அவர்கள் என்னை நோக்கி, ‘சகோதரனைக் கொன்ற உனது குமாரனை அழைத்து வா, நாங்கள் அவனைக் கொல்லவேண்டும். ஏனெனில் அவன் தனது சகோதரனைக் கொன்றிருக்கிறான்’ என்றனர். எனது குமாரன் நெருப்பில் மீந்திருக்கும் கடைசி கரிநெருப்பைப் போன்றவன். அவன் மரித்தால் எங்கள் குடும்ப விளக்கு அணைந்துவிடும். தந்தையின் சொத்தை சுதந்தரிக்கும்படி பிழைத்திருக்கும் ஒரே குமாரன் அவனே. அவன் மரித்தால் மரித்துப்போன எனது கணவனின் சொத்துக்கள் வேறொருவருக்குச் சொந்தமாகும். அவனது பெயரும் தேசத்தில் இல்லாதபடி அழிந்துப்போகும்” என்றாள்.