2 Samuel 15:27 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்னும் ராஜா ஆசாரியனான சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடு நகரத்திற்குத் திரும்பு; உன்னுடைய மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமான உங்கள் மகன்கள் இரண்டுபேர்களும் உங்களோடு திரும்பிப் போகட்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மேலும் அரசன் சாதோக் என்னும் ஆசாரியனிடம், “நீ ஒரு தரிசனக்காரனல்லவா? நீ உன் மகன் அகிமாஸுடனும், அபியத்தாரின் மகன் யோனத்தானுடனும் சமாதானத்தோடே பட்டணத்திற்குத் திரும்பிப்போ. நீயும் அபியத்தாரும் உங்கள் இரண்டு மகன்களையும் உங்களுடன் கூட்டிக்கொண்டு போங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்னும் ராஜா ஆசாரியனான சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடு நகரத்திற்குத் திரும்பு; உன்னுடைய மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமான உங்கள் மகன்கள் இரண்டுபேர்களும் உங்களோடு திரும்பிப் போகட்டும்.
Tamil Bible Romanised 2017
pinnum raajaa aasaariyanaagiya saathoakkai noakki: nee gnaanathirushdikkaaran allavoa? nee samaathaanaththoadea nagaraththi'rkuth thirumbu; un magan agimaasum abiyaththaarin magan yoanaththaanumaagiya ungga'l kumaarar ira'ndupearum ungga'loadeakoodath thirumbip poagattum.
Tamil OV
பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ராஜா ஆசாரியனாகிய சாதோக்கைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி அல்லவா? நகரத்திற்குச் சமாதானத்தோடு திரும்பிப் போ. உன் குமாரனாகிய அகிமாசையும் அபியத்தாரின் குமாரன் யோனத்தானையும் உன்னோடு அழைத்துப் போ.