2 Samuel 24:9 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோவாப் மக்களைக் கணக்கெடுத்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் எடுக்கத்தக்க யுத்தவீரர்கள் 8,00,000 பேர் இருந்தார்கள்; யூதா மனிதர்கள் 5,00,000 பேர் இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யோவாப் வீரர்களின் எண்ணிக்கையை அரசனுக்கு தெரிவித்தான். இஸ்ரயேலில் வாள் ஏந்தும் வீரர்கள் எட்டு இலட்சம்பேரும், யூதாவில் ஐந்து இலட்சம்பேரும் இருந்தனர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோவாப் மக்களைக் கணக்கெடுத்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் எடுக்கத்தக்க யுத்தவீரர்கள் எட்டு லட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனிதர்கள் ஐந்து லட்சம்பேர் இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
yoavaab janaththai ilakkampaarththa thogaiyai raajaavukkuk koduththaan; isravealilea pattayam uruvaththakka yuththa seavagar ettuladchampear irunthaarga'l; yoothaa manushar ainthu ladcham pear irunthaarga'l.
Tamil OV
யோவாப் ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டு லட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம்பேர் இருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோவாப் ராஜாவுக்குரிய ஜனங்களின் பட்டியலைக் கொடுத்தான். இஸ்ரவேலில் 8,00,000 ஆண்கள் வாளைப் பயன்படுத்தக் கூடியவர்கள். யூதாவிலும் 5,00,000 ஆண்கள் இருந்தனர்.