2 Samuel 3:34 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன்னுடைய கைகள் கட்டப்படவும் இல்லை; உன்னுடைய கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; அக்கிரமக்காரர்களுடைய கையில் இறக்கிறதுபோல இறந்தாயே” என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் பின்னும் அதிகமாக அவனுக்காக அழுதார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உன் கைகள் கட்டப்படவுமில்லை, உன் கால்களில் விலங்கு பூட்டப்படவுமில்லை. கொடியவர்கள் முன் விழுகிற ஒருவனைப்போல் விழுந்தாயே.” எல்லா மக்களும் அவனுக்காகத் திரும்பவும் அழுதார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உன்னுடைய கைகள் கட்டப்படவும் இல்லை; உன்னுடைய கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; அக்கிரமக்காரர்களுடைய கையில் இறக்கிறதுபோல இறந்தாயே என்றான்; அப்பொழுது மக்கள் எல்லோரும் பின்னும் அதிகமாக அவனுக்காக அழுதார்கள்.
Tamil Bible Romanised 2017
un kaiga'l kattappadavum illai; un kaalga'lil vilanggu poadappadavum illai; thushdar kaiyil madigi'rathupoala madinthaayea en'raan; appozhuthu janangga'lellaarum pinnum athigamaay avanukkaaga azhuthaarga'l.
Tamil OV
உன் கைகள் கட்டப்படவும் இல்லை; உன் கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அப்னேர், உனது கைகள் கட்டப்படவில்லை. கால்களில் விலங்கு மாட்டப்படவில்லை, அப்னேரே, தீயோர் உன்னை கொன்றனர்!” அப்போது ஜனங்கள் எல்லோரும் அப்னேருக்காக மீண்டும் அழுதனர்.