Acts 1:20 — Compare Translations

7 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சங்கீத புத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மேலும் பேதுரு சொன்னதாவது, “சங்கீதப் புத்தகத்தில் இது எழுதப்பட்டுள்ளது: “ ‘அவனுடைய இருப்பிடம் கைவிடப்பட்டுப் போவதாக; அதில் யாரும் குடியேறாதிருப்பார்களாக,’ என்பதும், “ ‘அவனுடைய பதவியை வேறொருவன் எடுத்துக்கொள்ளட்டும்.’
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
மேலும் பேதுரு சொன்னதாவது, “சங்கீதப் புத்தகத்தில் இதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது: “ ‘அவனுடைய இருப்பிடம் கைவிடப்பட்டுப் போவதாக; அதில் ஒருவரும் குடியிருக்காதிருப்பார்களாக.’ அத்துடன், “ ‘அவனுடைய தலைமைத்துவ பணியை வேறொருவன் பொறுப்பெடுக்கட்டும்.’
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சங்கீதபுத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும் என்றும் எழுதியிருக்கிறது.
Tamil Bible Romanised 2017
sanggeetha pusthagaththilea: avanudaiya vaasasthalam paazhaagakkadavathu, oruvanum athil vaasampa'n'naathiruppaanaaga en'rum; avanudaiya ka'nkaa'nippai vea'roruvan pe'rakkadavan en'rum ezhuthiyirukki'rathu.
Tamil OV
சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“சங்கீதத்தின் புத்தகத்தில் யூதாஸைக்குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ‘மக்கள் அவனது நிலத்தருகே செல்லலாகாது, யாரும் அங்கு வாழலாகாது.’ மேலும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ‘இன்னொருவன் அவன் பணியைப் பெறட்டும்.’