Acts 15:10 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இப்படியிருக்க, யூதரல்லாத விசுவாசிகளின் கழுத்தின்மேல் நம்மாலோ, நம் தந்தையராலோ சுமக்க முடியாத நுகத்தை சுமத்துவதினால், ஏன் இறைவனைச் சோதிக்கிறீர்கள்?
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இப்படியிருக்க, நம்மாலோ நம் முற்பிதாக்களாலோ சுமக்க முடியாத நுகத்தை, யூதரல்லாத விசுவாசிகளின் கழுத்தின் மேல் சுமத்தி, இறைவனை ஏன் சோதிக்கிறீர்கள்?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இப்படியிருக்க, நம்முடைய முற்பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கமுடியாமல் இருந்த நுகத்தடியைச் சீடர்களின் கழுத்தின்மேல் வைப்பதினால், நீங்கள் தேவனை சோதிப்பது ஏன்?
Tamil Bible Romanised 2017
ippadiyirukka, nammudaiya pithaakka'laalum nammaalum sumakkakkoodaathiruntha nugaththadiyaich seeshar kazhuththinmeal sumaththuvathinaal, neengga'l theavanaich soathippaanean?
Tamil OV
இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே யூதரல்லாத விசுவாசிகளிகளின் கழுத்தில் ஏன் பெரும் பாரத்தைச் சுமத்துகிறீர்கள். தேவனைக் கோபப்படுத்த நீங்கள் முயன்றுகொண்டிருக்கிறீர்களா? அந்தப் பாரத்தைச் சுமப்பதற்கு நமக்கும் நமது முன்னோர்களுக்கும் வலிமை இருக்கவில்லை!