Acts 18:10 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில், நான் உன்னுடனேகூட இருக்கிறேன். ஒருவனும் உன்னைத் தாக்கப்போவதுமில்லை, உனக்குத் தீங்கு செய்யப்போவதுமில்லை. ஏனெனில் இந்தப் பட்டணத்தில் எனக்குரிய அநேக மக்கள் இருக்கிறார்கள்” என்றார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
ஏனெனில் நான் உன்னுடனேகூட இருக்கின்றேன். ஒருவனும் உன்னைத் தாக்கப் போவதுமில்லை, உனக்குத் தீங்கு செய்யப் போவதுமில்லை. ஏனெனில் இந்தப் பட்டணத்தில் என்னுடைய மக்கள் அநேகர் இருக்கின்றார்கள்” என்றார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார்.
Tamil Bible Romanised 2017
naan unnudaneakooda irukki'rean, unakkuth theengguseyyumpadi oruvanum unmeal kaipoaduvathillai; inthap patta'naththil enakku aneaga janangga'l u'ndu en'raar.
Tamil OV
நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் உன்னோடு இருக்கிறேன். யாரும் உன்னை தாக்கித் துன்புறுத்த முடியாது. என்னுடைய மக்கள் பலர் நகரத்தில் இருக்கிறார்கள்” என்றார்.